திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலுக்கு கண்ணில்லை.. 80 வயது முதியவரை கரம்பிடித்த இளம் பெண்!
மத்தியபிரதேச மாநிலத்தில் 34 வயது இளம்பெண்ணை, 80 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக 90களில் பிறந்தவர்களுக்கு கூட பெண் கிடைக்காமல் ஆண்கள் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். ஆனால், 2கே கிட்ஸ் என அழைக்கப்படும் 2000ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் 20 வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது சமூக வலைத்தளங்கள் தான், இது போன்று பலரும் வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் 80 வயது முதியவர் ஒருவர், 34 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி மத்திய பிரதேசம் மாநிலம் அதர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவரான பலுராம் பக்கிரி. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயது ஷிலா இங்கிள் என்ற பெண்ணுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.