தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா.? 10 வயது சிறுமியின் சாதனை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
இயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டிக்கொண்டேயிருந்தால் நம் எதிர்காலம் ஆபத்தாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்துக்களாக உள்ளது. தற்போதைய வாழ்க்கைமுறையில் இயற்கை வளங்களை அழித்து தான் நிறைய பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதனால் தான் பல நாடுகளில் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் மக்களை உலகில் நீண்டகாலம் வாழ வைக்கும்.
தற்போது மறுசுழற்சி முறை முக்கியமான ஒன்றாக மாறி வரும் இந்த வேலையில் மறுசுழற்சியில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் 10 வயது சிறுமி ஒரு சாதனையை படைத்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த மான்யா ஹர்ஷா என்ற 10 வயது சிறுமி தனது வீட்டின் சமயலறையில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து வெஜிடபிள் பேப்பரை உருவாக்கியுள்ளார்.
தனது வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை வைத்து உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சிறுமி மான்யா ஹர்ஷா, வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை வைத்து பேப்பரை தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள செடிகளை வைத்தும் பேப்பர் தயாரித்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், ஆயிரம் பவுண்ட் பேப்பர் தயாரிப்பதற்கு நாம் எட்டு மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. மரங்கள் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இயற்கை வளங்களை ஒவ்வொரு நாளும் அழித்து நாம் ஒரு பொருளை தயாரிப்பதை காட்டிலும், இதுபோன்ற மறுசுழற்சி முறையை பயன்படுத்தி பேப்பரை தயாரிக்க முடியும். எட்டு முதல் பத்து வெங்காய இதழ்களை கொண்டு நாம் இரண்டு முதல் மூன்று பேப்பர் தயாரிக்க முடியும்.
அதேபோல 0.5 கிலோ பட்டாணி தோல்களைக் கொண்டு 3, 4 பேப்பர் தயாரிக்க முடியும். இந்த பேப்பர் கலராக இருக்கும். இந்த பேப்பரில் நாம் எழுதலாம், வரையலாம், சாதாரண பேப்பர் எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல் இதையும் பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். சிறுமியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.