வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
செல்போனில் ஆபாச வீடியோ பார்த்து...!! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது சிறுவன்..!!
சத்தீஷ்காரில் சிறுவன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு தனது வீட்டின் அருகே வசித்த பத்து வயது சிறுமியை, பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்காரில் உள்ள பெமிதரா மாவட்டத்தில், கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 10 வயது சிறுமி தூக்கு போட்ட நிலையில் மர்ம முறையில் உயிரிழந்து காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலைய உயரதிகாரி ஆம்பர் சிங் பரத்வாஜ் கூறுகையில்:-
முதல் கட்ட விசாரணை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் 17 வயது சிறுவன் இந்த குற்றத்தை செய்தது தெரிய வந்துள்ளது. சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்ததில், தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு அடிமையான சிறுவன், ஆபாச படங்களை பார்த்த பின்னர், சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நடந்த விசயங்களை, சிறுமி தனது வீட்டாரிடம் செல்லிவிட கூடும் என்ற பயத்தில், கைக்குட்டையை வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளான். அதன்பிறகு, சிறுமியை தூக்கில் மாட்டிவிட்டு பால்கனி வழியே தப்பி சென்றிருக்கிறான் என காவல்துறையினர் கூறினர். இதை தொடர்ந்து பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் சிறுவனை ஆஜர்படுத்தினர். அதன்பின்னர், துர்க் மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.