உறைகுளிரில் இருந்து தப்பிக்க அமைக்கப்பட்ட நாயின் இருப்பிடத்தை சேதப்படுத்தி சென்ற மனிதர்; மரித்துப்போன மனிதம்?..! 



a Anger Man demolish Dog Temprovorily Shelter Avoid Cold from Winter Season in UP Noida 

 

வடமாநிலங்களில் குளிர்காலத்தில் கடுமையான குளிர் நிலவும் என்பதால், மக்களும் - விலங்குகளும் தங்களை தகவமைத்துக்கொள்ள கடுமையான வாழ்வியல் போராட்டத்தை நடத்தவேண்டி இருக்கும். பூட்டிய கட்டிடத்திற்குள் குளிரை தாங்கும் உடைகளை அணிந்து மனிதர்கள் உறங்குவார்கள் எனினும், தெருக்களில் காணப்படும் நாய்கள் உட்பட கால்நடைகளின் நிலை சற்று கவலைக்கிடம்தான். 

அவைகள் இவ்வாறான காலங்களில் பெரும்பாலும் கூட்டமாக சேர்ந்து உறங்கும். வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களில் இவை இருக்கும். ஒருசில நல்ல உள்ளம் கொண்டவர்கள், தங்களின் வீட்டின் வாயில் பகுதியில் நாய்கள் உறங்குவதற்கு என தற்காலிக்காக மறைவுகளை ஏற்படுத்தி வைப்பார்கள்.

அந்த வகையில், நல்லுள்ளம் கொண்ட ஒருவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நாய்கள் உறங்க தன்னிடம் இருந்த செங்கல், இரும்பு சீட் பயன்படுத்தி தற்காலிக கட்டுமானத்தை ஏற்படுத்தியிருந்தார். அதனை கேடான எண்ணம் கொண்டவர் கால்களால் எட்டி உடைத்து சென்றார். இதுகுறித்த அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி, சர்ச்சை செயலை செய்தவருக்கு கண்டனத்தை குவித்து வருகிறது.