மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து திடீர் விபத்து.. அச்சத்தில் மக்கள்..!!
கடந்த ஜூன் 2-ஆம் தேதி மாலை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் - சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததனை தொடர்ந்து, 750-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் பலரும் தங்களது குடும்பத்தினர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனரா? என தெரியாமல் குழப்பத்தில் கண்ணீருடன் தேடியலைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு பேருந்து ஒன்று ஏற்றி சென்றது. ஆனால் மேற்கு வங்காளத்தின் மேதினிப்பூர் அருகே அந்த பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்னர் அவர்கள் வேறுவாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற விபத்தினை கட்டுப்படுத்த அரசு கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர்.