திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படுக்கை அறையில் இருந்த பெண்ணை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்: அதிர்ச்சி சம்பவம்...!
காதல் விவகாரத்தில், படுக்கையறையில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், 100 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் துர்கயாம்ஜல் அடுத்த அடிபட்லா பகுதியில் வசித்து வருபவர் வைஷாலி (24). இவர் ஒரு டாக்டர். நேற்று இவரது வீட்டிற்குள் திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்து, வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு, படுக்கையறையில் இருந்த வைஷாலியை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அவர்களை தடுக்க முயன்ற வைஷாலியின் பெற்றோரையும் அந்த கும்பல் கம்புகள், கட்டைகளை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்த ரச்சகொண்டா காவல்துறையினர், அடுத்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்ட வைஷாலியை மீட்டனர். இதுகுறித்து ரச்சகொண்டா காவல் துறை கமிஷனர் மகேஷ் பக்வத் கூறுகையில், வைஷாலியை கடத்திய கும்பலில் 16 பேரை கைது செய்து இருக்கிறோம். மேலும் 6 மணி நேரத்திற்குள் வைஷாலி மீட்கப்பட்டார். தலைமறைவான மற்ற குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று கூறினார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல், கொலை முயற்சி, போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருப்பவர்களில் நவீன் ரெட்டி (26) என்பவர், டீ விற்பனை நிலையங்களின் விளம்பரதாரராக இருக்கிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், வைஷாலியின் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்க மறுத்ததால், வைஷாலியை நவீன் ரெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.