திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே சூப்பர்... மனைவிக்கும் காதலனுக்கும் திருமணம் செய்து வைத்த கணவர்.!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. கணவர் ஒருவர் தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு ரோஸ் என்ற பெண்ணுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவரது மனைவி பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.
இத்தனை அறிந்து கொண்ட தினேஷ் தனது மனைவியை எப்படியாவது அவரது காதலன் ராகுலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக இரு வீட்டாரிடமும் பேசி அதற்கான ஒப்புதலையும் பெற்று இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ரோஸ் மற்றும் ராகுலுக்கு அவர்களின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . தனது மனைவியை அவரது காதலனுடனையே சேர்த்து வைத்த கணவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.