மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கை அறையில் தன் மனைவியுடன் இருந்த அந்தரங்க வீடியோக்களை முகநூலில் பதிவிட்ட கணவர்..!!
முதலிரவு மற்றும் மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்களையும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கணவர்.
போபால் மத்திய பிரதேசம் குவாலியரின் மச்லி மண்டியில் வசிக்கும் 27 வயது வாலிபர் ஒருவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த வாலிபர் இரண்டு வருடங்களுக்கு முன் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது வாலிபர் புல்லட் கேட்டதாகவும், ஆனால் மணமகள் வீட்டார் பைக் கொடுத்ததாகவும
கூறப்படுகிறது.
திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி இருக்கிறார். மனைவியிடம் கார் வேண்டும் என்றும் இல்லையேல் உன்னை விவகாரத்து செய்து விடுவேன் என்று கூறி தகராறு செய்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு அவரது மனைவியை பலமுறை அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். கணவனின் கொடுமைகளை பொறுக்க முடியாமல் அந்த பெண் குவாலியரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அறிந்த அந்த வாலிபர் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால், படுக்கையறையில் எடுக்கபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார்.
முதலிரவு முதல் படுக்கையறையில் அந்தரங்கமாக இருந்தது வரை அனைத்தையும் அவர் வீடியோ எடுத்து வைத்திருந்தார். இதையடுத்து அவர்கள் படுக்கையறையில் எடுத்த அந்தரங்க வீடியோ சமூக ஊடகங்களில் அந்த வாலிபர் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த வீடியோக்கள் வெளியானது குறித்து பெண்ணுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தெரியப்படுத்தினர்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் கூறியதாவது;- தனது கணவருக்கு வீடியோ எடுப்பதில் விருப்பம் அதிகம் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு என்னுடைய ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோ எடுத்துள்ளார்.
நான் மணப்பெண்ணாக அவர் வீட்டுக்குப் போனபோது நடந்த சடங்குகள் அனைத்தையும் வீடியோ எடுத்தார். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் அவரது தனிப்பட்ட வீடியோக்களையும் அவர் எடுத்தார். சில படுக்கையறை வீடியோக்களும் எடுத்துள்ளார். நான் மறுத்த போது யாரிடமும் காட்ட மாட்டேன் என கூறினார். ஆனால் அவர் இதையெல்லாம் ஒரு சதித் திட்டத்துடன் தான் செய்திருக்கிறார் என எனக்குத் தெரியாது என்று கூறினார்.