96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொடூரம்... சிக்கன் சமைத்து கேட்ட நண்பர்... ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்த இளைஞர்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹாலோ பிளாக் தொழிற்சாலையில் கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சார்ந்த தீரஜ் மண்டல்(27) மற்றும் சுஷில் கோஸ்வாமி(28) ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹாலோ பிளாக் கல் செய்யும் தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் வேலை செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல நண்பர்களுடன் மது அருந்தி இருக்கின்றனர்.
அப்போது சுஷிலிடம் தனக்கு கோழிக்கறி சமைத்து தரும்படி கேட்டிருக்கிறார் தீரஜ் மண்டல். அதற்கு சுஷில் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது கோபத்திலிருந்த தீரஜ் மண்டல் உறங்கிக் கொண்டிருந்த சுஷில் கோஸ்வாமி தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுஷில் சொந்த வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தீரஜ் மண்டல் தப்பி ஓடி விட்டார். காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சுஷில் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தீரஜ் மண்டலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.