96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சொந்த மகளையே கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை.! மனநலம் பாதிக்கப்பட்டவரா? காவல்துறை விசாரணை!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சார்ந்த தந்தை ஒருவர் தனது மகளை கோடாரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்துள்ள மாவேலிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ மகேஷ். இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி வித்யா இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தையும் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரது இறப்பிற்கு ஊருக்கு வந்த ஸ்ரீ மகேஷ் மறுபடியும் பணிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு இவரது தாய் அருகில் இருந்த மகள் வீட்டிற்கு சென்றிருந்தபோது இவரது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டிருக்கிறது உடனே பதறி போன அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார். அப்போது ஸ்ரீ மகேஷ் அவரது மகளை கோடாலியால் வெட்டி உள்ளார். அந்தக் குழந்தை ரத்த வெள்ளத்தில் சோபாவில் கிடந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது தாயாரையும் கொலை செய்ய வந்திருக்கிறார் ஸ்ரீ மகேஷ் அவரது கையிலும் கோடாரியால் வெட்டியதால் அவர் அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை படுகாயம் அடைந்த ஸ்ரீ மகேஷின் அம்மாவையும் அவரது குழந்தையையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அவரது தாயார் சிகிச்சை பெற்று வருகிறார் . மனைவியும் தந்தையும் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீ மகேஷ் மன்னன் பாதி தீர்ப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.