பெண் வழக்கறிஞருக்கு நிர்வாண படம், ஆ., வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்.!



a Man Sent Nude and Porn Video to Lady Lawyer

வழக்கறிஞருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாரணாசி நபர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த பெண் வழக்கறிஞருக்கு, வாட்ஸப்பில் ஆபாச படங்கள் மற்றும் விடியோக்கள், மர்ம நபரின் நிர்வாண வீடியோ போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மீறிஒண்டு வாரணாசி பகுதியை சார்ந்த 35 வயது நபரான நௌஷாத் ஆலம் என்பவரை கைது செய்தனர். 

maharashtra

விசாரணையில், இவர் பெண் வழக்கறிஞருக்கு வாட்சப் வழியாக ஆபாச படம், தனது நிர்வாண படம், ஆபாச விடியோக்கள் போன்றவற்றை அனுப்பியது உறுதியானது. மேலும், காவல் துறையினர் தன்னை கைது செய்ய வருகிறார்கள் என்ற உண்மையை தெரிந்ததும், வாட்ஸப்பில் தான் அனுப்பிய தகவலையும் நௌஷாத் அழிக்க முயற்சித்தும் அம்பலமானது.