ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பொது இடத்தில் அதற்கு அழைத்த காதலன்... நோ சொன்ன காதலி... காதலன் செய்த வெறிச்செயல்.!
மும்பையில் பொது இடத்தில் வைத்து காதலி உறவுக்கு வர மறுத்ததால் அவரை கொலை செய்ய முயன்ற காதலனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பையைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவித் சுக்தே. இவரும் ஆகாஷ்மக்கர் ஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷின் பிறந்தநாளான நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மும்பையில் உள்ள பாந்த்ரா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் இருந்த ஆகாஷ் லுக்னாவிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
மேலும் அவரை உறவுக்கு அழைத்திருக்கிறார். பொது இடத்தில் வைத்து இது போன்ற செயல்கள் வேண்டாம் என லுப்னா ஆகாஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் லுப்னாவின் தலைமுடியை பிடித்து கடற்கரையின் பாறையில் மோதியுள்ளார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்திருக்கிறது.
வலியால் துடித்த லுப்னாவை தலை முடியை பிடித்து இழுத்து கடல் தண்ணீரில் மூழ்கி கொலை செய்ய முயன்றிருக்கிறார் ஆகாஷ். லுப்னாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை ஆகாஷிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதலியை கொலை செய்யும் என்று ஆகாஷை தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.