3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பகீர்... மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் அடித்துக் கொலை.... 11 பேர் மீது வழக்குப்பதிவு.!
இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த சில காலங்களாகவே அதிகரித்து வருகிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவம் நாசிக் பகுதியில் நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகர் பகுதியைச் சேர்ந்த அஃபான், அப்துல் மஜித், அன்சாரி மற்றும் நசீர் ஷேக் என்ற இரு நபர்கள் தங்களது காரில் இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளனர். சின்னாருக்கு அருகே இருக்கும் சுங்கச்சாவடியை இவர்கள் கடந்த போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் இவர்களது வாகனத்தில் இறைச்சி இருப்பதை பார்த்து பசு பாதுகாப்பு குழுவிற்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கும்பலாக சென்று இவர்களது காரை மறித்து இருவரையும் தாக்கி விட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக தகவல் வந்ததையடுத்து காவல்துறையினர் ஒரு குழுவாக சென்று தாக்கப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி உயிரிழந்தார். ஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.
இது தொடர்பாக ஷேக் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை கொண்டு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 11 நபர்களும கண்டறிந்து கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் மீது கொலை கொலை முயற்சி மற்றும் கலவரம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.