மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீர்... தண்ணீர்... பிணக் குவியலிருந்து வந்த குரல்.... மீட்பு படையினரின் காலை பிடித்ததால் பரபரப்பு.!
ஒரிசாவின் ஏற்பட்ட பயங்கரமான ரயில் விபத்தில் 290 க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். பல்வேறுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது . இதன் மீட்பு பணிகள் சனிக்கிழமை வரை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக பால்சோர் நகரில் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே பிணங்கள் ஒரு பள்ளியில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. உறவினர்கள் வந்து அடையாளம் காட்டிய பின் அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்பு படையினர் இந்த உடல்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மீட்பு படையினர் உடல்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் மீட்பு படையினரின் கால்களை பிடித்து இழுப்பது போல் இருந்திருக்கிறது. யாரும் இல்லாத அறையில் தினரன காலை பிடித்து இழுப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அப்போது பிண குவியலில் இருந்த ஒரு நபர் மீட்பு படையினரின் காலை பிடித்து இழுத்திருக்கிறார். அந்த நபர் நான் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் விபத்தில் காலை இழந்ததால் அவரால் நகர முடியவில்லை.இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட மீட்பு குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.