#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகீர்... லிவ்விங் டு கெதர்... துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூர கொலை.... பின்னணியில் காதலனா.? காவல்துறை தீவிர விசாரணை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் அவரது காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள மிரா-பஹ்யந்தர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோஜ் ஷைனி(56). இவருடன் அவரது காதலி சரஸ்வதி வித்யா(36) கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் உறவு முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர் . அப்போது கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சரஸ்வதி வித்யா என்ன தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் அவரை கொலை செய்தது யார்? என காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரது காதலன் மனோஜ் சைனி கைது செய்யப்பட்டு அவரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.