இளம்பெண்ணின் ஆடையை கழற்றச்சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. மக்களே உஷார்.!



 a Mumbai Girl Cheated by Digital Arrest Scam 

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியிடம் இருந்து கவனமாக இருக்கவும். போலியான ஆவணங்கள் கொண்டு உங்களை ஆன்லைனில் கைது செய்வது போல இருந்தாலும், அதனை நம்ப வேண்டாம்.

சைபர் குற்றங்கள் என்பது இன்றளவில் அதிகரித்து இருக்கும் நிலையில், சமீபகாலமாக போதைப்பொருள் ஒன்று மும்பை, டெல்லி விமான நிலையத்தில் உங்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என போலி காவலர் தொடர்புகொண்டு மிரட்டி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்யும் நிகழ்வு நடந்து வருகிரது.

டிஜிட்டல் அரெஸ்ட்

இந்த சம்பவத்தில் பலரும் இலட்சக்கணக்கில் தங்களின் சேமிப்புகளை வழங்கி இழந்துள்ள நிலையில், மோசடியாளர்களை சேர்ந்தவர்கள் திருச்சூர் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசிய சம்பவமும் நடந்தது. இவ்வாறான மோசடி கும்பல் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறினால், அது மோசடி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் குடிக்க வைத்த பாஜக பிரமுகர்.. ஊழலை எதிர்த்ததால் பகீர்.!

போலி காவலர்

இதனிடையே, டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் இளம்பெண்ணின் ஆடையை கழற்ற வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சம்பவத்தன்று மேற்கூறிய போலி காவலர் கும்பலிடம் இருந்து அழைப்பு பெறப்பட்டுள்ளது. 

காவல்நிலையத்தில் புகார்

எதிர்முனையில் பேசிய மர்ம நபர், பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி, அவரின் ஆடையை கழற்றச் சொல்லியுள்ளார். பின் அதனை பதிவு செய்து, ரூ.1.7 இலட்சம் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!