மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான நிலையத்தில் சக பயணியிடம் எல்லை மீறிய பிரபல மலையாள நடிகர்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் வினையன். இவர் தமிழிலும் திமிரு, மரியான், சிறுத்தை, சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனது மனைவி பபிதா பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த இவர் அடிக்கடி பாலியல் சர்ச்சைகளில் சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவா விமான நிலையத்தில் இண்டிகா விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தபோது சகப் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவன் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக ஏர் சேவா போர்டல் மூலம் சிவில் விமான போக்குவரத்து துணைச் செயலாளரிடம் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பயணி. தன்னை நடிகர் வினையன் வீடியோ எடுத்ததாகவும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிலளித்துள்ள வினையன் தான் எந்த வீடியோ எடுக்கவில்லை என்றும் வேண்டுமானால் தனது செல்போனை பரிசோதித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் மனுவில் விநாயகனை எதிர்மறை மனுதாரராக சேர்க்க மனுதார வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.