மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை கொன்று சாக்கடையில் வீசிய பூசாரி... அதிர வைத்த கொலை சம்பவம்.!
தெலுங்கானா மாநில தலைநகர் ஆன ஹைதராபாத்தில் தனது காதலியை கொன்று சாக்கடையில் வீசிய பூசாரி ஒருவரை ஹைதராபாத் மாநகர போலீசார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைதராபாத் நகரின் ஷாம்ஷா பகுதியைச் சார்ந்தவர் சாய் கிருஷ்ணா பூசாரியான இவர் அப்சரா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண் இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை தீர்த்து கட்ட முடிவு எடுத்த பூசாரி அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். மேலும் அவரது உடலை சருர் நகர் சாக்கடையில் வீசி சென்று இருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி அன்று சாக்கடையில் பெண் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் பூசாரி சாய் கிருஷ்ணா தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல் துறை அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அந்தப் பெண் ஜூன் ஒன்றாம் தேதி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவந்திருக்கிறது.