திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: டிக்கெட் செக்கர் சஸ்பெண்ட்..!
ரயிலில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை அளித்த டிக்கெட் செக்கர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி ரயில் மூலம் அங்கிருந்து அஜ்மீருக்கு சென்றார். அந்த பெண் சென்ற ரயிலில் விஷால் சிங் என்பவர் டிக்கெட் பரிசோதகராக சென்றுள்ளார்.
அந்த பெண் பொது கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் விஷால் சிங் அந்த பெண்ணுக்கு ஏ.சி. கோச்சில் இருக்கை ஒதுக்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறிய அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த வெளிநாட்டு பெண் பயணி அளித்த புகாரின்பேரில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் விஷால் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்