மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!.. வாயை பிளந்த டாக்டர்கள்!: அதிர்ச்சியில் உறைந்த தாய்..!
பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது ஆச்ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசிப்பவர் ஆர்த்தி குஷவாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்நது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அதிர்ச்சி அளிக்கும் விதமாக நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததால் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். 2.3 கிலோ எடையுடன் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கூடுதலாக இருக்கும் இரண்டு கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளதாகவும்.மேலும், கருமுட்டை பிரிதலின் போது உண்டான குறைபாட்டால் குழந்தை நான்கு கால்களுடன் பிறந்துள்ளது என்றும், கூடுதலாக இருக்கும் இரண்டு கால்களும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறினர்.