திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்.. காம வெறியன்களிடம் சிக்கி சின்னா பின்னமான கொடூர சம்பவம்..!
கன்னியாகுமரியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புதுச்சேரியில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால் வீட்டுக்கு செல்வதற்கு கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அழைந்து திரிந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த ஒரு கும்பல் அவரிடம் தங்குவதற்கு வீடு இருப்பதாக கூறி நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தப் இளம்பெண் ஒரு வீட்டில் தனியாக அடைத்து வைக்கப்பட்டு 2 நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பல சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று அந்த கொடூர கும்பலானது வீட்டில் இல்லாத போது அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பித்து அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்று நடந்தவற்றையெல்லாம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கடைக்காரர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலிசார் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அந்த இளம் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா, தினேஷ் மற்றும் அரவிந்தன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.