96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுமை... இளம் பெண்ணை கோடாரியால் தாக்கிய மாமனார்... சமூக வலைதளங்களில் பரவிய அதிர்ச்சி வீடியோ.!
உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு சில கும்பல் சேர்த்து கோடாரியால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த கும்பலை கைது செய்து இருக்கிறது காவல்துறை.
உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டிற்குள் சென்ற கும்பல் அங்கிருந்து இளம் பெண் ஒருவரை குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியே போட்டு அடித்து உதைத்தது சுற்றி அத்தனை மக்கள் இருந்தும் யாரும் அந்த பெ,ண்ணை காப்பாற்ற முன்வரவில்லை.
क्या तमाशा है, हाथ में हथियार लेकर एक गुंडा लड़की पर हमला करता है, लोग चिल्लाते हैं वीडियो बनाओ...गुंडा लड़की पर वार करता है और धीरे-धीरे चला जाता है
— Kavish Aziz (@azizkavish) June 2, 2023
गाजियाबाद में ससुराल पहुंची लड़की को एक गुंडे ने बलकटी से काटकर किया घायल.. pic.twitter.com/kmnV0FA5Bh
அந்தப் பெண்ணை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கோடாரியால் கடுமையாக வெட்டவும் செய்தது அந்த கும்பல். இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த கும்பலைச் சார்ந்த ஒருவர் கையில் கோடாரியை வைத்துக்கொண்டு பொதுமக்களையும் விரட்டியதால் அவர்கள் யாரும் அந்த பெண் தாக்கப்படுவதை தடுக்க முன்வரவில்லை.
அந்தப் பெண் வரதட்சனை கொடுமை காரணமாக தாக்கப்பட்டதாகவும் அவரை தாக்கியது அவரது மாமனார் என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கொடூர சம்பவங்களை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் அவற்றைப் பரப்பியதால் பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் மாமனார் உட்பட அந்த கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறது.