அடடே.. இனி ஆதார் அட்டையை புதுப்பித்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை..! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!



Aadhar card renewal is free of charge

தனித்துவ அடையாள அட்டை ஆணையம் கட்டணமின்றி ஆதார் தகவல்களை இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதுவரை ஆதார் அட்டையில் வயது, முகவரி மற்றும் பெயர் திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், மார்ச் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையிலும் புதுப்பிக்காதவர்களும் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

இந்தியா

இந்த சேவையை "My Aadhaar" இணையதளத்தில் மட்டுமே இலவசமாக பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம்போல ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.