திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூர சம்பவம்... பட்டப்பகலில் பள்ளி சென்ற 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி சென்ற மர்ம நபர்கள்... போலீசார் விசாரணை!!
டெல்லியில் தென்மேற்கு பகுதியான வார்கா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியுடம் சாலையில் வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடியவாறு வந்த இரண்டு மர்ம நபர்கள் 17 வயது சிறுமி மீது திடீரென ஆசிட்டை வீசி சென்றுள்ளனர்.
அப்போது அந்த சிறுமி வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
देश की राजधानी में दिन दहाड़े एक स्कूली बच्ची पर 2 बदमाश दबंगई से तेज़ाब फेंककर निकल जाते हैं… क्या किसी को भी अब क़ानून का डर है ? क्यों तेज़ाब पर बैन नहीं लगाया जाता ? SHAME pic.twitter.com/kaWWQYey7A
— Swati Maliwal (@SwatiJaiHind) December 14, 2022
போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவினை வைத்து ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிட்டை சந்தையில் கிடைக்கும் காய்கறியை போல் விற்பனை செய்வதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக சிலர் குற்றம் சாடி வருகின்றனர்.