மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியலமைப்புக்கு பிரச்சனை என்றால் வீதியில் இறங்கிடுவேன்; டெல்லியில் கமல் ஹாசன் கர்ஜனை..!
ராகுலின் கோரிக்கைப்படி உரையாற்ற தொடங்கி, தவறு செய்வோரை கட்சி பேதமின்றி கண்டிப்பேன் என பரபரப்புடன் பேசினார்.
கன்னியாகுமரியில் தொடங்கி புதுடெல்லியில் நிறைவு பெரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைபயண நிறைவு விழாவில் நடிகர் & மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, அவர் பேசுகையில், "எனது அரசியல் பயணம் என்பது மக்களுக்காக தொடங்கப்பட்டது. தேசத்தின் ஒற்றுமைக்காக நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றுசேர்ந்துள்ளோம். இந்திய அரசியலமைப்புக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும், நான் தெருவில் வந்து நிற்பேன்.
எனக்கு யார் ஆட்சியில் இருப்பார்கள் என்று கவலை இல்லை. நான் அதனாலேயே இங்கு வந்துள்ளேன். நான் ஆங்கிலத்தில் முதலில் பேசுவதாக இருந்தது. ஆனால், சகோதரர் ராகுல் காந்தி தமிழில் பேச வேண்டுகோள் வைத்ததால் தமிழில் உரையாற்றினேன். இனி மக்களுக்காக ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்.
நான் எதற்காக இங்கு வந்துள்ளேன் என பலரும் கேட்டார்கள். இந்தியனாக நான் இங்கே உள்ளேன். என் தந்தை காங்கிரஸ் கட்சிக்காரர். பல சித்தாந்தத்தை நான் கொண்டிருந்தேன். மக்களுக்கு முன்னேற்றம் கொடுக்க அரசியல் கட்சியை தொடங்கினேன்" என்று பேசினார்.