மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா பயம்: தன் வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிய நடிகர் ஷாருக்கான்..! வைரல் புகைப்படம்.!
கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவர்களால் மூடியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 14,686,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
சமீபத்தில் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உட்பட அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தனது வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவர்களால் மூடியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார் ஷாருக்கான். தற்போது தனது குடும்பத்துடன் அவர் வசித்துவரும் சொகுசு பங்களாவின் வெளிப்புறம் முழுவதும் பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.