இவருக்கே இப்படியொரு நிலைமையா! தடுப்பூசி போட்ட பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி! வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!



actress-mimi-chakaravarthy-get-corono-vaccination-in-fr

நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியுமான மிமி சக்கரவர்த்தி போலி தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை மிமி சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அண்மையில் முகாம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வயிற்று வலி,ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

mimi chakaravarthy

 பின்னர் மிமி உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு தேபஞ்சன் தேவ் என்பவர் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாகவும், அந்த முகாமிலேயே அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அத்தகைய போலி முகாமில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போடப்பட்டுள்ளது. 

தேபஞ்சன் தேவ் போலி தடுப்பூசி முகாம் அமைத்து ஒரு கோடி வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலி தடுப்பூசி முகாம் நடத்திய தேபஞ்சன் தேவ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.