திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மோடியின் தலையிலேயே திருடன் என எழுதிய சிம்புவின் நாயகி , பாய்ந்தது தேசத்துரோக வழக்கு.!
தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கன்னட திரைத்துறையில் நடித்து வந்த ரம்யா பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ரம்யா, கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் கடந்த 2014ல் அதே தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வியடைந்த ரம்யா தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
#ChorPMChupHai pic.twitter.com/Bahu5gmHbn
— Divya Spandana/Ramya (@divyaspandana) 24 September 2018
இந்நிலையில், நடிகை ரம்யா கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி மெழுகு சிலையின் நெற்றியின் மீது, தானே திருடன் என்று எழுதிக்கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகை ரம்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.