தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆதித்யா எல்-1 கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...!! : அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ..!!
ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ நேற்றூ வெளியிட்டது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 57 ( PSLV - C 57 ) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான 24 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கும்.
🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:
— ISRO (@isro) August 28, 2023
The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
🗓️September 2, 2023, at
🕛11:50 Hrs. IST from Sriharikota.
Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்ட இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. சுமார் 100 முதல் 120 நாட்கள் வரை பயணித்து L1 சுற்று வட்டப்பாதையை அடையும் ஆதித்யா எல்-1, சூரிய புயல், சூரியனின் ஈர்ப்பு விசை மற்றும் சூரிய கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பாக சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், குறித்து ஆய்வு செய்யவும் இந்த விண்கலம் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.