96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இணையத்தில் வைரலாகும் விளம்பர போஸ்டர்.. தந்தையை விற்க முயன்ற சிறுவன்..!
தனது அப்பாவை விற்பனை செய்ய முடிவெடுத்து வீட்டின் முன்பு விளம்பர பலகை வைத்த 8 வயது சிறுவனின் செயல் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.
குழந்தைகள் என்றாலே ஒரு விதமான ஆனந்தம் தான். குழந்தைகளின் தூய்மையான உள்ளமும், கள்ளம் கபடம் அற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவர்ந்து இழுத்து விடும். ஒரு சில குழந்தைகள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அழகானதாக இருக்கும்.
அந்த வகையில் 8 வயது குழந்தை ஒன்று தனது தந்தையிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளது. இறுதியில் சண்டை முடிவுக்கு வந்த பிறகும் குழந்தையின் கோபம் தனியவில்லை. இதனால் அந்தக் குழந்தை தனது தந்தையின் மீது உள்ள கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தந்தையை விற்க முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த குழந்தையானது தனது வீட்டின் கதவில் விளம்பர பலகை வைத்து தந்தையை விற்க முயன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது