தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சரியான திட்டமிடலால் கொரோனாவை வெகுவாக குறைத்த கேரள அரசு.! ஏப்ரல் 20 பிறகு இதுதான் திட்டம்..!
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் தாக்கம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதன்படி இந்தியாவிலும் தற்போது கொரோனா தனது கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு கேரளா தான் முதலிடம் வகித்து வந்தது.
அதன்பிறகு கொரோனா ஆபத்தை உணர்ந்த கேரளா அரசு சரியான திட்டமிடுதல், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீவிர கடுமையான நடவடிக்கைகளால் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி தற்போது அதன் தாக்கத்தை வெகுவாக குறைத்துள்ளது கேரளா அரசு.
இந்நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏப்ரல் 20க்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வை அறிவித்துள்ளார். அதன்படி ஊரடங்கு தளர்வு செய்யப்படும் மாவட்டங்களில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதிலும் பெண்கள் வாகனத்தை ஓட்டி வந்தால் இந்த விதியில் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.