ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதலியுடன் கணவன் உல்லாசம்: செருப்பால் விளாசித்தள்ளிய ஆக்ரோஷ மனைவி..!
உத்திர பிரதேச மாநிலம், ஆக்ரா- டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் பொறுப்பாளராக பணியாற்றி வருபவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் தனது கள்ளக்காதலியுடன் டெல்லியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். இது குறித்த அவரது மனைவி நீலத்திற்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் அங்கு வந்தார். ஓட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த நீலம் உக்கிரமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
திடீரென தனது செருப்பைக் கழற்றிய நீலம், கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த நேரத்தில், கள்ளக்காதலர்கள் இருவரும், நீலத்திடம் கைகூப்பிமன்னிப்பு கேட்டனர். ஆனாலும் நீலத்தின் ஆக்ரோஷம் குறையவில்லை. மனைவியின் தாக்குதலால் நிலைகுலைந்த தினேஷ் குழந்தைகளிடம் தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதுள்ளார்.
இதற்கு பதிலளித்த குழந்தைகள், நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக உள்ளது என்று கூறியுள்ளனர். பல மாதங்களாக தினேஷ் கோபால் வேலை என கூறி விட்டு கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றியுள்ளார். இதற்கிடையே மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.