#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. என்ன இப்படி ஆகிருச்சி?.. Ak61 இந்த வருடம் ரிலீஸ் ஆகாதா?..!!
தமிழ் திரையுலகில் கடந்த 1993-ல் வெளியான "அமராவதி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். இவரது முதல் படம் நினைத்த அளவிற்கு வெற்றியை தராத நிலையில், பல விமர்சனங்களும் இருந்தது.
ஆனால் அதனை கண்டுகொள்ளாத அஜித் தனது விடாமுயற்சியுடன் போராடி அடுத்தடுத்த படங்களில் திறமையை நிரூபித்திருந்தார். இதனால் எம்ஜிஆர், ரஜினி வரிசையில் தனக்கென ஓர் தனிஇடத்தை உருவாக்கினார்.
பீனிக்ஸ் பறவை எப்படி ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் மீண்டும் எழுமோ, அதுபோல ஒவ்வொருமுறையும் தனது திறமையை நிரூபிப்பார். இந்த நிலையில், இவரது நடிப்பில் ஏகே 61 என்ற படம் உருவாகிவருகிறது.
இயக்குனர் எச். வினோத் இயக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஷூட்டிங் இன்னும் நீண்டு கொண்டிருப்பதாகவும், சில நாட்கள் சென்னையில் சூட்டிங் நடத்திவிட்டு பின் புனே செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த வருடம் இறுதியில் அல்லது பொங்கல்தினத்தில் தான் படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. பொங்கல் தினத்தில் முன்பே தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் களத்தில் உள்ள நிலையில், ஏகே 61 திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் இது குறித்து அறிந்த ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இன்னும் காத்திருக்க வேண்டுமா? என்று வருகின்றனர்.