மைனர் சிறுமியை ஒரு லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கி... கல்யாணம் செய்த முதியவர்...!



An old man who bought a minor girl for one lakh rupees and married her...

மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியில் வசித்து வரும், மாணவி ஒருவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என்று காவல்துறையில், அந்த பெண்ணின் தாயார் புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் கடத்தல் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவியை தேடி வந்தனர். மாணவியின் செல் போன் சிக்னலை வைத்து அந்த மாணவி கடைசியாக தாதர் ரயில் நிலையத்தில் இருந்தது தெரியவந்தது. உடனே ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது மாணவி ஒரு தம்பதியுடன் ஹூப்ளி செல்லும் ரயிலில் ஏறியது தெரியவந்தது.

உடனே அந்த ரயில் நிற்கும் இடங்களில் எல்லாம் அந்த பெண் இறகினாரா என்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மீரஜ் ரயில் நிலையத்தில் இறங்கியது தெரியவந்தது. அவர்கள் மீரஜ் ரயில் நிலையத்திலிருந்து, பைக்கில் கிளம்பி சென்றனர். அந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து அது மும்பை செம்பூர் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தும் சுதா மனோஜ் ஜோஷி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

காவல்துறையினர் அவரை விசாரணை செய்தனர் அப்போது அந்த மாணவியுடன் சென்றது அவருடைய மனைவி என்றும் அவர்களுடன் இருப்பது அவருடைய மாமா என்றும் கூறியுள்ளார். அவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவர்கள் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தனர்.

கடைசியாக அவர்கள் அவுரங்காபாத்தில் இருக்கும் சிந்தி காலனியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் உடனே அதிரடி சோதனை நடத்தி மாணவியை மீட்டனர். பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சுதா மனோஜ் ஜோஷி மற்றும் லடப்பா என்பது தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் அந்த பெண்ணை அவுரங்காபாத்தில் உள்ள கம்பத் காம்பிளே என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதை தொடர்ந்து கண்பத் அந்த மாணவியை கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல்துறை அதிகாரி விநாயகர் கூறுகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு அந்த பெண்ணை வாங்கி, அந்த பெண் மைனர் என்றும் தெரிந்தும், கண்பத் அவரை திருமணம் செய்து உள்ளார்.

கன்பத்திடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது, திருமணம் செய்ய பெண் கிடைக்காததால், விலைக்கு வாங்கி திருமணம் செய்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.