"தமிழில் நான் பயின்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியாது" - உண்மையை உடைத்த ஆனந்த் மகேந்திரா; காரணம் இதோ.!



Anand Mahindra about Tamil Word Learning on Childhood 

 

இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, தனது இளவயது கல்வியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, லவ்டேல் பகுதியில் இருக்கும் லாரன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இந்த பள்ளி பல தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியான படங்களில் இடம்பெற்று இருக்கிறது. 

கிட்டத்தட்ட 700 ஏக்கர் பரப்பு கொண்ட பள்ளி வளாகத்தின் மலரும் நினைவுகளை, ஓடிடியில் வெளியான தி ஆர்ச்சிஸ் மற்றும் பிக் கேல்ஸ் டோன்ட் க்ரை ஆகிய தொடரில் கண்டுகளித்தனர். பின் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

அந்த பதிவில், "எனது நினைவிலிருந்து திரைப்பட விரும்பிகளுக்கு ஒருசில தகவலை வழங்குகிறேன். நான் எனது லவ்டேல் லாரன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றது எனக்கு நினைவில் இருக்கிறது. அது பல திரைப்பட இயக்குனர்களின் ஹாட்ஸ்பாட் எனவும் கோரோலாம். 

இப்போது நான் பார்த்த ஆர்ச்சீஸ், பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை தொடர் எனக்கு அதை நினைவூட்டியது. 60 களின் பிற்பகுதியில் 1968ம் ஆண்டு நேர்வழி என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பை பார்த்து, அங்கு சிறுவர்களுடன் நின்றது இன்றும் நினைவில் இருக்கிறது. 

முன்னணி நடிகர்கள் ஜெய்சங்கர் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோரை நேரில் பார்த்தோம். அவர்கள் கவ்பாய் உடையில் இருந்தார்கள். இத்தாலிய படைப்பான செர்ஜியோ லியோனின் பிஸ்டபுள் ஆப் டாலர்ஸ் படம் வெளியான பின் தமிழ் சினிமா அதனை பின்பற்றியது. இதற்கு கரி வெஸ்டர்ன் எனவும் பெயரிடப்பட்டது" என கூறினார்.

இந்த பதிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், சார் உங்களுக்கு தமிழ் தெரியுமா? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆனந்த் மகேந்திரா வெளிப்படையான பதில் ஒன்றை வழங்கி இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, "துரதிர்ஷ்டவசமாக, நான் பள்ளியில் கற்ற பெரும்பாலான தமிழ் பேச்சுக்களை கண்ணியமான நிறுவனத்தில் பயன்படுத்த முடியாது!" என கூறியுள்ளார். 

இதன் வாயிலாக தமிழ் அவர் கற்றுக்கொண்ட வார்த்தைகளை புரிந்துகொள்ள முடிகிறது என பலரும் தங்களின் மனப்போக்கு கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இறுதிவரை அவர் பயின்ற வார்த்தை குறித்து கூறவில்லை.