மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிச்சை எடுத்த பணத்தில் 8 லட்சம் ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த பிச்சைக்காரர்.! குவியும் வாழ்த்துக்கள்.!
பிச்சை எடுத்த பணத்தில் பிச்சைக்காரர் ஒருவர் கோவிலுக்கு 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த 71 வயதான யாதி ரெட்டி என்பவர் கடந்தஹ் சில வருடங்களுக்கு முன் ரிக்சா இழுத்து, பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் வயதுதான் காரணத்தால் ரிக்சா இழுக்கும் வேலையை விட்டுவிட்டு விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் பிச்சையெடுக்க ஆரம்பித்துள்ளார். இதனை அடுத்து, கடந்த 7 வருடங்களாக பிச்சை எடுத்துவந்த யாதி ரெட்டி தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயை சாய்பாபா கோவில் மற்றும் கோ சாலை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொடர்ந்து பிச்சை எடுத்து வரும் இவர் இதுவரை கோவிலுக்காக சுமார் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிச்சை எடுத்த பணத்தில் ஒருவர் 8 லட்சம் ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் இந்த செயலுக்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.