மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபாச படத்தில் நடித்ததாக நடிகை குறித்து அவதூறு பேச்சு: கண்ணீர் விட்டு கதறியழுத நடிகை.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைச்சராக இருந்து வரும் நடிகை ரோஜா, ஆபாச படத்தில் நடித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இந்த விஷயம் அம்மாநில அரசியலில் பெரும் விஸ்வரூபத்தை எடுத்துள்ள நிலையில், அமைச்சர் ரோஜா இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது கண்டனத்தை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார்.
அப்போது, அவர் பேசுகையில், "நான் நிர்வாண படத்தில் நடித்ததாக தெரிவித்து சித்ரவதை செய்து வருகிறார்கள். எனது குணத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்?.
தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப்பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கவுள்ளேன். அரசியலை இவ்வுளவு கீழ்த்தரமாக பேச பயன்படுத்துகிறார்கள்" என தெரிவித்தார்.