மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; திருப்பதியில் நடந்த பயங்கரம்.. அலிபிரி-திருமலை பாதையில் அதிர்ச்சி.!
தனது பெற்றோருடன் திருப்பதிக்கு சென்ற சிறுமி சிறுத்தையால் தாக்கி தூக்கி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, திருமலை அலிபிரி நடைபாதை வழியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வது இயல்பு. ஆனால், இவர்கள் பயணிக்கும் பாதை மலைசார்ந்தது என்பதால், சில நேரம் வனவிலங்குகளின் தாக்குதல் என்பது இருக்கும்.
சம்பவத்தன்று நெல்லூரை சேர்ந்த தினேஷ் - சசிகலா தம்பதிகள், தங்களின் 6 வயது பெண் குழந்தை லக்ஷிதாவுடன் அலிபிரி பாதையில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, நேற்று (வெள்ளிக்கிழமை) சிறுமி இரவு 07:30 மணிக்கு மேல் திடீரென மாயமாகி இருக்கிறார்.
அவரை காணாது பதறிப்போன பெற்றோர் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் விரைந்து தங்களின் பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு சிறுமியை தேட அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமியை அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்த நிலையில், சிறுமியின் உடல் இன்று அதிகாலை 4 மணிக்கு நரசிம்ம சுவாமி கோவில் அருகே இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை சிறுத்தை கடித்து கொலை செய்தது முதற்கட்டமாக உறுதியாகியுள்ளது.
தகவலை அறிந்ததும் சிறுமியின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமிராவை சோதனை செய்கையில், சிறுமி பெற்றோரை விட்டு சற்று விலகி இருந்தபோது, அடர்ந்த புதருக்குள் இருந்து பாய்ந்த சிறுத்தை சிறுமியை தூக்கி சென்றது உறுதியானது.