திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலியல் தொல்லையால் அதிர்ச்சி; கடிதம் எழுதிவைத்து கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில், சைதன்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பிடெக் பட்டம் பயின்று வரும் மாணவி விசாகா. இவர் அங்குள்ள ரூபா ஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
சம்பவத்தன்று தனது கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை காரணமாக அவர் உயிரை மாய்த்து தெரியவந்தது.
மாணவி விசாகா கைப்பட எழுதிய கடிதமும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதனால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.