மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம், சித்ரவதை.. கொடியவனின் கொடுமையால் பரிதவித்த சிறுமி..!
கடந்த 3 aanduaklaga சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து பாலியல் சித்ரவதை செய்து வந்த கயவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம், அகமதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஹபீஸ் பாஷா. அப்பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய ஹபீஸ் பாஷா, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்த சிறுமி, அவ்வப்போது சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய சிறுமி, ஆஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், அவரின் மீது சாதாரண வழக்கே பதியப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கால் ஜாமினில் வெளியே வந்துள்ளார். நல்லுள்ளம் கொண்ட சில அரசியல் கட்சியினர் சிறுமிக்கு ஆதரவாக போராட்டமும் நடத்தினர்.
இதனால் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, அவரை கைது செய்ய வேண்டும் என நெருக்கடியும் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஹபீஸ் பாழா சென்னைக்கு தப்பி செல்லவே, 20 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்,