மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 இலட்சம் வரதட்சணை போதாது... திருமணத்தை நிறுத்திய மணப்பெண். கண்கலங்கியபடி சென்ற மணமகன்.!
பழங்குடியின முறைப்படி தனக்கு வழங்கப்படும் வரதட்சணை போதாது, எனக்கு ரூ.2 இலட்சம் வேண்டும் என அடம்பிடித்த பெண் திருமணத்தை நிறுத்தியதால் சோகம் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், போச்சாரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், அசுவாராபேட்டை பகுதியை சேர்ந்த பழங்குடியின இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயம் செய்யப்பட்டது. தம்பதிகளின் திருமணம் அங்குள்ள பத்ரதிரி குடெம் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்தது.
பழங்குடியினர் வழக்கத்தில் மருமகளுக்கு மணமகன் வீட்டார் சார்பில் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு மணப்பெண் வீட்டாருக்கு ரூ.2 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மணமக்கள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வருகை தரும் நேரம் வந்தது.
திருமண வரவேற்பு ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், காலை மணமகன் மணமேடைக்கு வந்தார். ஆனால், மணமகள் வீட்டார் வரவில்லை. இதனால் மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு தொடர்பு கொண்டபோது, மணப்பெண் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. எனக்கு கூடுதல் வரதட்சணை வேண்டும் என தெரிவித்தார்.
மணமகளிடம் மணமகன் வீட்டார் கெஞ்சியும் பயனில்லை. இதனால் மணமகன் வீட்டார் காவல் நிலையம் செல்லவே, அங்கு காவலர்கள் பெண்ணுக்கு அறிவுரை கூறியும் பலன் இல்லை. இருதரப்பு வீட்டார்களும் வாக்குவாதம் செய்து, இறுதியில் ரூ.2 இலட்சம் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்டவர்கள் அங்கிருந்து புலம்பியபடி புறப்பட்டு சென்றனர்.