காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆந்திராவில் எரிமலையா?.. திடீரென ஆற்றுக்கு அருகே கக்கிய புகை.. அதிகரித்த வெப்பம்.. நடப்பது என்ன? மக்கள் அதிர்ச்சி..!!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண சீமா பகுதியில் பலத்த மழையானது பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வரலாற்றில் இல்லாத அளவு வெள்ளம் செல்கிறது. கோதாவரி நதி அருகேயுள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலராஜ். இவரின் வீட்டருகே 3 நாட்களுக்கு முன்னதாக திடீர் புகை வந்துள்ளது.
இதனைக்கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், பள்ளம் தோண்டிய சமயத்தில் அதிகளவில் புகை வெளியாகியுள்ளது. மேலும், ஊரின் வெப்பமும் அதிகரித்துள்ளது. 3 கி.மீ தூரத்திற்கு புவியின் வெப்பக்காற்று வீசவே, அச்சமடைந்த மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் புவியியல் ஆராய்ச்சித்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் மக்களை பாதுகாப்பாக அவ்வூரில் இருந்து வெளியேற்றி, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பின்னர் விபரம் தெரியவரும்.