35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
நிர்வாக வசதிக்காக கூடுதலாக 13 மாவட்டங்கள் பிரிப்பு.. மாவட்டம், தலைநகர் எது?.. அரசு அறிவிப்பு.!
வளர்ச்சிப்பணி மற்றும் நிர்வாக வசதிக்காக கூடுதலாக 13 மாவட்டங்களை பிரித்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, அங்கு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மொத்தமாக 26 மாவட்டங்களை கொண்டுள்ளது.
ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் தலைநகராக ஸ்ரீகாகுளம், வைசியநகர் மாவட்டத்தில் தலைநகராக வைசியநகர், மான்யம் மாவட்டத்தில் தலைநகராக பார்வதிபுரம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் தலைநகராக படேறு, விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகராக விசாகப்பட்டினம், அநாகப்பள்ளி மாவட்டத்தின் தலைநகராக அநாகப்பள்ளி, காக்கிநாடா மாவட்டத்தின் தலைநகராக காக்கிநாடா, கோண சீமா மாவட்டத்தின் தலைநகராக அமலாபுரம்,
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகராக ராஜமஹேந்திரவரம், மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகராக பீமவராம், ஏலூரு மாவட்டத்தின் தலைநகராக ஏலூரு, கிருஷ்ணா மாவட்டத்தின் தலைநகராக மச்சிலிப்பட்டினம், என்.டி.ஆர் மாவட்டத்தின் தலைநகராக விஜயவாடா, குண்டூர் மாவட்டத்தின் தலைநகராக குண்டூர், பாபட்லா மாவட்டத்தின் தலைநகராக பாபட்லா, பால்நாடு மாவட்டத்தின் தலைநகராக நசாராயப்பேட்டை, பிரகாசம் மாவட்டங்களின் தலைநகராக ஓங்கோல்,
எஸ்.பி.எஸ் நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராக நெல்லூர், கர்னூல் மாவட்டத்தின் தலைநகராக கர்னூல், நந்தியால் மாவட்டத்தின் தலைநகராக நந்தியால், அனந்தபுரம் மாவட்டத்தின் தலைநகராக அனந்தபுரம், ஸ்ரீ சத்யாசை மாவட்டத்தின் தலைநகராக புட்டபர்த்தி, ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தின் தலைநகராக கடப்பா, அன்னமய்யா மாவட்டத்தின் தலைநகராக ராயக்கோட்டி, சித்தூர் மாவட்டத்தின் தலைநகராக சித்தூர், ஸ்ரீ பாலாஜி மாவட்டத்தின் தலைநகராக திருப்பதி ஆகியவை பிரிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக வசதி மற்றும் வளர்ச்சிப்பணிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, இனி மேற்கூறிய மாவட்டங்களின் தலைநகராக குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.