மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீக்கடையில் திருடச்சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலம், குண்டூர் லிங்ககுண்டலா பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டா (வயது 13). குண்டூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தேநீர் கடை வைத்துள்ள நபர், நேற்று இரவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் சிறுவன் கடைக்கு வந்து பூட்டை உடைத்து பொருட்களை திருடியுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், மின்விளக்கின் ஸ்விட்சை இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மணிகண்டாவின் மீது மின்சாரம் பாய்ந்து சாவா இடத்திலேயே பலியாகியுள்ளார்.
நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல கடையை திறக்க வந்த உரிமையாளருக்கு கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின் உள்ளே சென்று பார்க்கையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.