53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பலாத்காரம் செய்த காதலன்.. வாயில் துணிவைத்து, கை-கால்களை கட்டி பயங்கரம்.!
காதலனை சந்திக்க அவனின் வீட்டிற்கு சென்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர், பெத்த கஹானி பகுதியில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவரின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் பிரம்மம். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில், பி.டெக் 3 ஆம் வருடம் பயின்று வருகிறார்.
பிரம்மமும் - இளம்பெண்ணும் கடந்த சில வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரம்மமின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தனியாக சந்தித்து காதலை மெருகேற்றியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினத்தில் காதலியை வீட்டிற்கு வரும்படி காதலன் அழைப்பு விடுத்துள்ளார்.
காதலி வீட்டிற்கு வருவதற்கு முன்னரே, கயவன் பிரம்மம் தனது நண்பர்களான வரப்ரசாத், நரசிம்மா ஆகியோரை வரவழைத்து இருக்கிறான். விபரம் அறியாமல் காதலனை சந்திக்க காதலி ஆவலுடன் சென்ற நிலையில், அங்கு அவருக்கு காதலனால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் காத்திருந்துள்ளது.
வீட்டிற்குள் பெண்மணி சென்றதும் பிரம்மம் மற்றும் அவனின் நண்பர்கள் என 3 பேர் சேர்ந்து, பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்மணி நடந்த கொடுமையை கண்ணீருடன் பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரம்மம் உட்பட 3 பேருக்கு வலைவீசியுள்ளனர்.