திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நொடியில் ஆற்றோடு சென்ற சொத்து.. இடிந்து விழுந்த வீடு.. ஷாக் வீடியோ வைரல்.!
ஆற்றங்கரையோரம் இருந்த வீடு இடிந்து ஆற்றுக்குள் விழுந்த காணொளிகள் வெளியாகியுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டம், குஞ்சனா ஆற்றங்கரையோரம் அமைந்த வீடு பலநாட்களாக பெய்த தொடர் மழையால் நனைந்து இடிந்து ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடப்பா இரயில்வே கொடுரு நகர் பகுதியில் உள்ள நரசரபேட்டா தெருவில், நேற்று பிற்பகலில் வீடு இடிந்து விழுந்தது. வீடு இடிந்து விழுவதற்கு முன்னதாக பெரிய அளவிலான விரிசலும் விட்டு இருந்தது.
A house situated on the banks of Gunjana river, collapsed and #washedaway near Railway Koduru of #AndhraPradesh 's #Kadapa district, due to incessant rainfall over the past few days. No injuries.#housecollapsed #KadapaRains #Andhrapradeshrains pic.twitter.com/OWcnp1aomI
— Surya Reddy (@jsuryareddy67) November 28, 2021
தொடர் கனமழை, வெள்ளம் காரணமாக ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்ட்ட நிலையில், ஷேக் பதுல்லா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு இடிந்து நீருக்குள் விழுந்துள்ளது.