மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார் வருவாய் வராததால், 30 ரௌடிகளை ஏவி ஒயின்சாப்பை அடித்து நொறுக்கிய கலால்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி - புங்கனூர் சாலையில், கிருஷ்ணாபுரம் கலால் துறைக்கு சொந்தமான மதுபான குடோன் உள்ளது. குடோனில் கண்காணிப்பாளராக மதனப்பள்ளி ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஜவஹர் பாபு பொறுப்பு வகித்து வருகிறார். உதவி ஆய்வாளராக சுரேஷ் குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார்.
மதனப்பள்ளி அவென்யூ பகுதியில் மதுபான கடையுடன் கூடிய பார், உணவகம் செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக வெளிநாடு சென்றுவிடவே, அப்பகுதியை சேர்ந்த சோமு என்பவர் மேற்கூறிய 2 காவலரின் ரகசிய ஆதரவுடன், நண்பர் வேங்கட சிவப்ரசாத் உதவியுடன் பாறை நடத்தி வந்துள்ளார்.
மதுபான பாருக்கு தேவையான பொருளை கொண்டு வரும் சமயத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இடையே தகராறு ஏற்படவே, இதுகுறித்து வேங்கட சிவப்ரசாத் பாரின் உண்மையான உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில், பார் உரிமையாளர் கலால் துறை ஆணையரிடம் புகார் அளிக்கவே, பார் மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரின் சட்டவிரோத வருமானம் பாதிக்கப்பட்ட காரணத்தால், ஆத்திரமடைந்து ஜன. 30 ஆம் தேதி வேங்கட பிரசாத்தை 30 ரவுடிகளை ஏவி தாக்கி, பாரையும் சூறையாடி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வேங்கட பிரசாத் மதனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் புகாரை ஏற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் காவலர்களின் சட்டவிரோத செயல் உறுதியாகவே, காவல் ஆய்வாளர் ஜவஹர் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோரை கைது செய்து சிர்ராயில் அடைத்தனர். மேலும், 30 ரௌடிகளின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.