மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரக்கமற்ற தாய்! பிறந்த சில மணித்துளிகளில் கழிவறையில் ஆண் குழந்தை; எங்கு தெரியுமா?
ஆந்திராவில், ஒரு தாய் ஆனவரே பிறந்த தனது குழந்தையை கழிவறையில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குடிபாலா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. அங்கு பிரசவத்திற்காக ஒரு பெண்மணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று மருத்துவமனையின் கழிவறையிலேயே அழகான ஆண் குழந்தையை பிரசவித்த அந்த பெண்மணி ஆனவள் அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு மருத்துவமனையிலிருந்து யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகியுள்ளார். சிறிது நேரம் கழித்து கழிவறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் குழந்தையை வீசி சென்ற அந்தப் பெண்மணி யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு மத்தியில் இரக்கமற்ற முறையில் குழந்தையை வீசி சென்ற அந்தப் பெண்மணியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.