அதிகமான நபர்களுடன் பாலியல் தொடர்பு கொள்வது பெண்களா!. ஆண்களா?.. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!



are-women-who-have-sex-with-more-people-men-according-t

ஆண்களை விட பெண்கள் அதிகமானவர்களுடன் பாலியல் உறவு கொள்வது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆண்களை விட பெண்கள் அதிக நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால், மனைவி, உடன் வாழ்ந்தவர் அல்லாத ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்வதில் ஆண்களின் எண்ணிக்கை நான்கு சதவீகிதமாக உள்ளது. இது பெண்களை விட 0.5 சதவீகிதம் அதிகம்.

1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக ஆண்களை விட பெண்கள், அதிகமானவர்களுடன் பாலியல் உறவு கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஒரு பெண் சராசரியாக 3.1 செக்ஸ் பார்ட்னர்களை வைத்துள்ளனர். ஆண்களுக்கு சராசரியாக 1.8 செக்ஸ் பார்ட்னர்கள் உள்ளனர். 

ஆனால், இந்த கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களில், தங்கள் மனைவி அல்லது துணையாக இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீகிதம் நான்காக உள்ளது. பெண்களின் இந்த எண்ணிக்கை 0.5 சதவீகிதமாக இருக்கிறது. 2019-21 ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப நல ஆய்வு, 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.சமூக, பொருளாதார மற்றும் பிற பின்னணி பண்புகள் குறித்து தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை தரவுகளை வழங்குகிறது. வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பயனுள்ள திட்டத்தை செயல்படுத்தவும் இது பயனுள்ளதாக அமையும்.