மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோட்டில் பட்டாசு வெடித்ததை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் மீது தாக்குதல்.. போலீஸ் விசாரணை.!
மும்பையில் கண்ணம்வார் பகுதியில் வசித்து வருபவர் ப்ரீத்தி. இவர் சமூக ஆர்வலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தீபாவளியன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் மற்றும் 30 வயது உடைய நபர் ஒருவர் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர்.
இதனைக் கண்ட ப்ரீத்தி சாலையில் பட்டாசு வெடிப்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ப்ரீத்தி கூறியதை பொருட்படுத்தாமல் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்த பிரதீப் என்பவர் பட்டாசு ஒன்றை பற்ற வைத்து பிரீத்தி மீது வீசி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தி அந்த நபரிடம் சென்று ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தெரியாமல் நடந்து விட்டதாக கூறி கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரதீப் தகாத வார்த்தைகளால் ப்ரீத்தியை கடுமையாக திட்டி உள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரீத்தி பிரதீப்பை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ஆட்டோவில் ஏறிய பிறகும் பிரதீப் பிரீத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் காவல் நிலையம் அருகே வந்தபோது ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியில் ப்ரீத்தியின் தலையை மோதி விட்டு பிரதீப் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ப்ரீத்தி காவல் நிலையத்தில் பிரதீப்பின் மீது புகார் அளித்தார். மேலும் ப்ரீத்தி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.